மாவட்ட செய்திகள்

மழை பாதித்த பகுதிகளை கவர்னர் பார்வையிட்டார் + "||" + The governor visited areas affected by rain

மழை பாதித்த பகுதிகளை கவர்னர் பார்வையிட்டார்

மழை பாதித்த பகுதிகளை கவர்னர் பார்வையிட்டார்
புதுவையில் மழை பாதித்த பகுதிகளில் கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார்.
புதுச்சேரி,

புதுவையில் கடந்த 3 நாட்களாக பலத்தமழை பெய்து வருகிறது. நேற்று காலை கவர்னர் கிரண்பெடி மழை பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட அவர் உப்பனாறு வாய்க்காலை பார்வையிட்டார்.

பின்னர் அங்கிருந்து மரப்பாலம், நடேசன் நகர், இந்திராகாந்தி சிலை சதுக்கம், ரெயின்போநகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் மழைநீரை வெளியேற்றவும், போக்கு வரத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இது குறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தொடர்மழை ஏற்படும் போது மரப்பாலம் சந்திப்பு போக்குவரத்துக்கு சவாலாக உள்ளது. அந்த பகுதியில் உள்ள வாய்க்கால் அதிக தண்ணீர் செல்ல போதுமானதாக இல்லை. எனவேதான் மழைகாலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்குகிறது. இதற்கு உடனடியாக பொறியியல் சார்ந்த தீர்வு தேவை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தும்போது இதனை முழுமையாக சீரமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு கவர்னர் கிரண்பெடி சென்றார். அங்கு குற்றப்பதிவேடுகளை பார்வையிட்டார். பின்னர் போலீஸ் நிலையத்தை சுற்றிப்பார்த்த அவர், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க போலீசாரை அறிவுறுத்தினார். ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. என்னிடம் சக்தியை வீணாக்கவேண்டாம்: உங்கள் கட்சி எம்.எல்.ஏ.விடம் சவால் விடுங்கள் - நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதில்
என்னிடம் உங்கள் சக்தியை வீணாக்கவேண்டாம் என்றும் உங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு சவால் விடுங்கள் என்றும் கவர்னர் கிரண்பெடி பதில் அளித்துள்ளார்.
2. ஊழலை தடுக்க மக்கள் ஆதரவு தேவை - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
ஊழலை தடுக்க மக்கள் ஆதரவு தேவை என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
3. உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி - கிரண்பெடி கருத்து
உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி உதவியை பெற முடியும் என்று கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
4. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: எந்த போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவிக்கலாம் - கவர்னர் கிரண்பெடி தகவல்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக எந்த போலீஸ்நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
5. குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பீட் போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும் - கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பீட் போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.