மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலி: பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார் + "||" + Serial theft at Perambalur Echoes of events: Police raising awareness by publicizing leaflets

பெரம்பலூரில் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலி: பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

பெரம்பலூரில் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலி: பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
பெரம்பலூரில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலியாக, திருட்டை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் போலீசார் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் திருடர்களின் கூடாரமாக பெரம்பலூர் மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க பெரம்பலூரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும், சந்தேகம்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களையும் பிடித்தும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தகவல் தெரிவிக்கவும்

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நி‌ஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி வழிக்காட்டுதலின் பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார், போலீஸ் ஏட்டுகள் செல்வம், கார்த்திக் மற்றும் போலீசார் பெரம்பலூர் நகரில் திருட்டை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை துண்டுபிரசுரங்களாக பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த துண்டு பிரசுரத்தில் பொதுமக்கள் தங்களது வீட்டினை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலக எண்ணான 9498100691, போலீஸ் நிலையம் எண்ணான 9498100692, போலீஸ் இன்ஸ்பெக்டர் எண்ணான 9498169024, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் எண்களான 9942245205, 9498190653-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும்.

வெளியூர் செல்லும் போது வீட்டில் நகை, பணத்தை வைக்காமலும், ஏ.டி.எம்.கார்டு மற்றும் முக்கிய பத்திர ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்து பயன்படுத்தும் வகையிலும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். தங்கள் வீட்டின் முன்புறமும், பின்புறமும் மற்றும் சாலையை கவனிக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். சந்தேகம்படும்படியாக சுற்றித்திரியும் நபர்கள் குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் தந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
உளுந்தூர்பேட்டை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர்.
2. மளிகை கடையில் நூதன முறையில் திருடிய கும்பல் - போலீசார் வலைவீச்சு
மளிகை கடையில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் திருடிய வெள்ளை சட்டை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
3. உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு
திருச்சி உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. தொடர் விடுமுறையால் கிரு‌‌ஷ்ணகிரி அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக கிரு‌‌ஷ்ணகிரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
5. பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் : தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 70 பேர் கைது
பெங்களூருவில், திருட்டு, கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1.48 கோடி நகை-பணம் உள்பட ஏராளமான பொருட்கள் மீட்கப்பட்டன. பெங்களூருவில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை தென்கிழக்கு மண்டல போலீசார் கைது செய்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-