மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த முதியவர் திருவாரூரில் பரபரப்பு + "||" + Soil oil for the collector's office An elderly man who had filed a petition with a bottle was thriving in Thiruvarur

கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த முதியவர் திருவாரூரில் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த முதியவர் திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு முதியவர் மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர் அலி (வயது 67). இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனை செய்த போது அவருடைய பையில் மண்எண்ணெய் பாட்டில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நான் கட்டிய வீடு எனது மனைவி பெயரில் உள்ளது. அவர், என் விருப்பத்திற்கு மாறாக எனது மகள் பெயருக்கு அந்த வீட்டை எழுதி கொடுத்து விட்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் என்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் எனது மகள் வழியில் சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மண்எண்ணெய் பாட்டில்

எனது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதால் செய்வது அறியாமல் மண்எண்ணெய் பாட்டிலுடன் பாதுகாப்பு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அவர், கூத்தாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவருடைய குடும்பத்தினருடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்எண்ணெய் பாட்டிலுடன் முதியவர் மனு கொடுக்க வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை அருகே ரூ.8 லட்சத்தில் கண்மாய் வடிகால் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை அருகே ரூ.8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
2. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் ரூ.985 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு
வேலூர் மாநகராட்சி பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.985 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3. வங்கிகள் கடன் இலக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகள் கடன் இலக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
4. வாடகை வாகன தகுதிச்சான்று பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் கலெக்டரிடம், டிரைவர்கள் மனு
வாடகை வாகன தகுதி சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. விவசாயிகள் மழைநீரை சேமித்து பயன்படுத்த வேண்டும் கலெக்டர் சண்முகசுந்தரம் பேட்டி
விவசாயிகள் கிடைக்கின்ற மழைநீரை சேமித்து பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.