மாவட்ட செய்திகள்

ஆசிரியை தற்கொலைக்கு முயன்ற சம்பவம்; தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு + "||" + The incident where the teacher attempted suicide; Record the case against the headmaster

ஆசிரியை தற்கொலைக்கு முயன்ற சம்பவம்; தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு

ஆசிரியை தற்கொலைக்கு முயன்ற சம்பவம்; தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு
சிவகங்கை, தலைமை ஆசிரியை திட்டியதால் ஆசிரியை தற்கொலைக்கு முயன்றார். இதுக்குறித்து தலைமை ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தார்.
சிவகங்கை, 

சிவகங்கை டி.புதூர் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(வயது48). இவர் சிவகங்கையை அடுத்த முத்துபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 27-ந்தேதி இவரை, பள்ளி தலைமை ஆசிரியை கீதாஞ்சலி திட்டியதால் அறிவியல் ஆய்வகத்தில் இருந்த திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்பு அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். இந்தநிலையில் ஆசிரியை சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ, தலைமை ஆசிரியை கீதாஞ்சலி மீது வழக்கு பதிவு செய்தார்.