மாவட்ட செய்திகள்

மேகமலை மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு + "||" + On the Magamalai mountain pass Landslides in 10 places - Traffic Disruption

மேகமலை மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு

மேகமலை மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு
சின்னமனூர் அருகே மேகமலை மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சின்னமனூர்,

சின்னமனூர் அருகே மேகமலை உள்ளது. ஓங்கி உயர்ந்துள்ள மரங்கள், ரம்மியமான சூழலில் மழைச்சாரலில் நனைந்தபடி, பரந்து விரிந்து கிடக்கும் தேயிலை தோட்டங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்டும்.

சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு, மேகமலை மலை அடிவார பகுதியான தென்பழனி முதல், மேகமலையின் ஹைவேவிஸ் வரையிலான 36 கி.மீ. தூரம் மலைப்பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக மேகமலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் மேகமலை மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் பாறைகளும் உருண்டு மலைப்பாதையில் விழுந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. குறிப்பாக, தமிழன்காடு பகுதியில் இருந்து கடனாஎஸ்டேட் வரையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலை முழுவதும் மண்ணும், கல்லும் மூடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து மேகமலைக்கு செல்லக்கூடிய வாகனங்களை மலை அடிவாரமான தென் பழனியில் போலீசாரும், வனத்துறையினரும் தடுத்து நிறுத்தினர். அதேபோல் மலையின் மீது இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் ஹைவேவிஸ் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன் மலைப்பாதையை சரிசெய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினரும், போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மலைப்பாதையில் விழுந்த மண்ணையும், மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மூணாறு நிலச்சரிவு: கேரள முதல்வர் மற்றும் ஆளுநர் நேரில் ஆய்வு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்தேதியன்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
2. மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 3 பேரின் உடல்கள் மீட்பு: சாவு எண்ணிக்கை 52 ஆக உயர்வு
மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனால் சாவு எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.
3. தென்கொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு
தென்கொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 10 தமிழர்களின் உடல்கள் மீட்பு-பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
மூணாறு அருகே, நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 10 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் சாவு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
5. தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் தீவிரமடைகிறது குடகில் பயங்கர நிலச்சரிவு
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர் கனமழையால் குடகில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய அர்ச்சகர் உள்பட 7 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதற்கிடையே 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...