மாவட்ட செய்திகள்

திருப்பூர், பல்லடத்தில் 36 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை + "||" + Food security officials raided 36 stores in Tirupur, Palladam

திருப்பூர், பல்லடத்தில் 36 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

திருப்பூர், பல்லடத்தில் 36 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை
திருப்பூர், பல்லடத்தில் 36 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணி, கேசவராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பூர் மாநகராட்சி வடக்கு மற்றும் பல்லடம் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தந்த பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகள், பானிபூரி கடைகள், பாஸ்ட் புட் கடைகள் உள்பட 36 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கெட்டுப்போன காய்கறிகள் 5 கிலோ, சாயம் கலந்த டீத்தூள் 6 கிலோ, ஜூஸ் வகைகள் 6 லிட்டர், லேபிள் மற்றும் தேதி இல்லாத தின்பண்டங்கள் 18 கிலோ, அழுகிய பழங்கள் 7 கிலோ, பாலித்தீன் பைகள் 4 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்காத 7 கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

நோட்டீஸ்

உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்து வரும் கடை உரிமையாளர்களுக்கு உடனடியாக உரிமம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதுபோல் தண்ணீர் தேக்கி வைத்திருந்த டிரம் மற்றும் பாத்திரங்களில் 4 இடங்களில் கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டு தண்ணீரை கொட்டி கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டது. மேலும், அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஜூஸ் தயார் செய்து விற்பனை செய்கிறவர்கள் தரமான பழங்கள், தரமான பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் ஐஸ் கட்டிகள் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய எண்ணெயை திரும்ப, திரும்ப பயன்படுத்தக்கூடாது. உணவு பொருட்களில் கலப்படம் செய்கிறவர்கள் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. சுதந்திர தினத்தையொட்டி காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மற்றும் காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2. தூத்துக்குடியில் போலீசார் அதிரடி சோதனை: ரூ. 17 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.17 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. ஊத்துக்கோட்டை அருகே ஆந்திராவுக்கு மது பாட்டில்கள் கடத்த முயற்சி; 4 பேர் கைது கார் பறிமுதல்
ஊத்துக்கோட்டை அருகே காரில் ஆந்திராவுக்கு மது பாட்டில்கள் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 182 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
4. வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் அதிரடி சோதனை: வீடு வாடகைக்கு எடுத்து ஹவாலா பணப்பரிமாற்றம்? தஞ்சாவூரை சேர்ந்தவர் கைது
வேலூரில் வீடு வாடகைக்கு எடுத்து ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதா? என்பது குறித்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5. ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 20 பேர் கைது
பெங்களூருவில் 4 போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.