மாவட்ட செய்திகள்

திட்டச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Frontline Abolition Frontline Demonstration

திட்டச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

திட்டச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
திட்டச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி,

திட்டச்சேரி பஸ் நிலையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நாகை மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் எம்.ஜெயபால், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில துணை தலைவருமான மகேந்திரன், மாவட்ட செயலாளர் சுபா‌‌ஷ் சந்திரபோஸ், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனி. மணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜா, விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் சிங்காரவேலு ஆகியோர் பேசினர்.

ஆணவ கொலை

ஆணவ கொலைகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவ கொலைகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் பாலு நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரியும், இதற்கு பதிலாக மாற்று திட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று மாலை 6 மணியளவில் கூடலூர் பழைய பஸ்நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. புதிய கல்வி கொள்கையை கண்டித்து ஒடுக்கப்பட்டோர் கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஒடுக்கப்பட்டோர் கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
3. குமாரபாளையம், திருச்செங்கோட்டில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம், திருச்செங்கோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. நாகையில் போலீசாரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாகையில் போலீசாரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி நடந்தது
கோட்டூரில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை