மாவட்ட செய்திகள்

மயிலம் அருகே, மொபட்டில் கணவருடன் சென்ற செவிலியரிடம் தாலி சங்கிலி பறிப்பு + "||" + Near Mailam, Went with her husband in Moffat Dali chain flush with nurse

மயிலம் அருகே, மொபட்டில் கணவருடன் சென்ற செவிலியரிடம் தாலி சங்கிலி பறிப்பு

மயிலம் அருகே, மொபட்டில் கணவருடன் சென்ற செவிலியரிடம் தாலி சங்கிலி பறிப்பு
மயிலம் அருகே மொபட்டில் கணவருடன் சென்ற செவிலியரின் தாலிசங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி பவுர்ணமி(வயது49). இவர் ஆலகிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் ஆல கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போட்டார்.

பின்னர் அவர் தனது கணவருடன் மொபட்டில் மயிலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அவர்கள் மயிலம் ரெயில் நிலையம் அருகில் உள்ள கொடிமா கிராமத்தில் மொபட்டில் வரும் போது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவன் ஹெல்மெட் அணிந்து வந்து கொண்டு இருந்தான்.

திடீரென தட்சிணாமூர்த்தியின் மொபட் அருகே வந்த அவன், பவுர்ணமியின் கழுத்தில் இருந்த 3¼ பவுன் தாலிசங்கிலியை இழுத்து பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றான்.

இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி செவிலியர் தர்ணா
வேப்பங்குப்பம் போலீஸ்நிலையம் முன்பு தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி செவிலியர் தர்ணா.
2. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் செவிலியர், போலீஸ், தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கட்டணமில்லா கல்வி வேந்தர் ஐசரி கணேஷ் அறிவிப்பு
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் செவிலியர், போலீஸ், தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கட்டணமில்லா கல்வி அளிக்கப்படும் என பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
3. பணி முடிந்து வீடு திரும்பிய போது ஸ்கூட்டர் கவிழ்ந்து செவிலியர் பலி மற்றொருவர் படுகாயம்
காவேரிப்பட்டணம் அருகே ஸ்கூட்டர் கவிழ்ந்த விபத்தில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த செவிலியர் பலியானார். அவருடன் சென்ற மற்றொரு செவிலியர் படுகாயம் அடைந்தார்.