மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 6 மாணவர்கள் கைது + "||" + The college has arrested six students who had previously protested against the bill

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 6 மாணவர்கள் கைது

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 6 மாணவர்கள் கைது
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கரந்தையில் உள்ள கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநகர செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

6 பேர் கைது

இந்த நிலையில் தஞ்சை மேற்கு போலீசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து அருண்குமார், அரவிந்த், சிலம்பரசன், மணிகண்டன், நந்தகுமார், ஆனந்தராஜ் ஆகிய 6 மாணவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளும் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்திகள்

1. விலைவாசி உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து, மகிளா காங்கிரசார் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. சித்த மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஒருங்கிணைந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
3. பள்ளி வளாகத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையம் மாணவர்கள் அவதி
பட்டுக்கோட்டையில் பள்ளி வளாகத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
4. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாகையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.