மாவட்ட செய்திகள்

அந்தியூர் கோவிலில் அம்மன் ஊஞ்சல் ஆடியதாக பரபரப்பு - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பக்தர்கள் பரவசம் + "||" + In the Anthiyur temple Amman Swing For atiyat Furore

அந்தியூர் கோவிலில் அம்மன் ஊஞ்சல் ஆடியதாக பரபரப்பு - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பக்தர்கள் பரவசம்

அந்தியூர் கோவிலில் அம்மன் ஊஞ்சல் ஆடியதாக பரபரப்பு - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பக்தர்கள் பரவசம்
அந்தியூர் கோவிலில் அம்மன் ஊஞ்சல் ஆடியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
அந்தியூர்,

அந்தியூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு் பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதன்பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று கோவில் ஊழியர்கள் அங்குள்ள அலுவலகத்தில் உட்கார்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது கருவறை முன்பு தொங்க விடப்பட்ட திரைச்சீலையின் பின்னால் அம்மன் ஊஞ்சலில் ஆடியது போன்று ஒரு ஒளி வெள்ளம் பிரகாசமாக தெரிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. உடனே அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று கோவில் முன்பு திரண்டனர். இதைத்தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசயைில் நின்று பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் அம்மன் ஊஞ்சல் ஆடியதாக வெளியான வீடியோ வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.