மாவட்ட செய்திகள்

தஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை வாலிபர் கைது + "||" + Arrest worker stabbed to death in Thanjay Mariamman temple

தஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை வாலிபர் கைது

தஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை வாலிபர் கைது
தஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் பக்தர்கள் இந்த கோவிலில் முடிகாணிக்கை செலுத்துவதும், குழந்தைகளுக்கு காதுகுத்துவதும் வழக்கம் ஆகும்.

முடிகாணிக்கை செலுத்தும் இடம் கோவில் அருகே தெப்பக்குளக்கரையில் உள்ளது. இங்கு காதுகுத்தும் தொழிலாளியாக மாரியம்மன்கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன்(வயது 80) பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று மாலை குளத்துக்கு குளிப்பதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு வாலிபர் கோவிந்தராஜனை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜன் கீழே சாய்ந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

கோவிந்தராஜை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் மாரியம்மன் கோவில் தாமரைக்குளக்கரையை சேர்ந்த முருகேசன் மகன் அஜீத்(21) என்பது தெரிய வந்தது. அவர் கோவிந்தராஜனை எதற்காக கத்தியால் குத்தினார்? என்பது குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபருக்கு தூக்கு தண்டனை: தாய்-மகள் உள்பட 3 பேரை கொன்றவர்
தாய், மகள் உள்பட 3 பேரை கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
2. நெய்வேலியில், 2 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெய்வேலியில் 2 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
3. பாலியல் பலாத்கார வழக்கில் 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது கேரளாவில் பிடிபட்டார்
பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்தவரை 24 ஆண்டுகளுக்குப் பின் கேரளாவில் போலீசார் கைது செய்தனர்.
4. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ‘திடீர்’ கைது
சேலத்தில் வாடகை வீட்டை காலி செய்ய மறுத்து, பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுசை போலீசார் நேற்று திடீரென கைது செய்தனர்.
5. சுங்கச்சாவடியில் வேன் டிரைவர், கிளீனர் மீது சரமாரி தாக்குதல் ஊழியர்கள் 6 பேர் கைது
ஓசூர் அருகே சுங்கச்சாவடியில் வேன் டிரைவர், கிளீனர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய ஊழியர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.