மாவட்ட செய்திகள்

ரூ.21 லட்சத்துக்கு பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விட்டதாக பரபரப்பு புகார்- ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 3 கிராம மக்கள் அளித்தனர் + "||" + Panchayat leader to the tune of Rs.21 lakh Tabloid report that it had bid

ரூ.21 லட்சத்துக்கு பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விட்டதாக பரபரப்பு புகார்- ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 3 கிராம மக்கள் அளித்தனர்

ரூ.21 லட்சத்துக்கு பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விட்டதாக பரபரப்பு புகார்- ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 3 கிராம மக்கள் அளித்தனர்
பஞ்சாயத்து தலைவர் பதவியை ஒரு தரப்பினர் ரூ.21 லட்சத்துக்கு ஏலம் விட்டதாகவும், எனவே தங்களுக்கு தனி பஞ்சாயத்து உருவாக்கி தரும்படி கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 3 கிராம மக்கள் புகார் அளித்தனர்.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதனகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஆதனகுறிச்சி, கிழவனேரி, கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ராநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊராட்சி தற்போது பெண்கள்(பொது) பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி தலைவர் பதவிக்கு ஒரு பெண் வேட்பாளரை தேர்வு செய்துள்ளனர். இதற்காக ரூ.21 லட்சம் ஏலம் விடப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த எங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக எங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளனர். இதனால் எங்கள் சமுதாயத்தினர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறைவான வாக்காளர்களை கொண்டுள்ளதால் நாங்கள் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்று கருதி எங்களை கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதன் காரணமாக தேர்தலுக்கு பின்னர் எங்கள் கிராமத்திற்கான நலத்திட்டங்கள் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே எங்களுக்கு தனி ஊராட்சி ஒதுக்கி தரவேண்டும். அல்லது அருகில் உள்ள மற்ற ஊராட்சிகளோடு சேர்த்துவிட வேண்டும். கடந்த காலங்களில் மேற்கண்ட பகுதியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் நாங்கள் முழுமையாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறையும் அதேபோன்று நிகழ வாய்ப்பு உள்ளது.

எனவே நாங்கள் அச்சமின்றி வாக்களிக்க கண்ணன்கோட்டை அரசு பள்ளியில் வாக்குச்சாவடி அமைத்து தரவேண்டும். இல்லாவிட்டால் ஆதனகுறிச்சி காலனி, கிழவனேரி காலனி, கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து கலெக்டர் வீரராகவராவிடம் கேட்டபோது, ’பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விட்டுள்ளனரா? என்று அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்துவார்கள். தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போதைய நிலையில் புதிதாக ஊராட்சி ஒதுக்குவது, வாக்குச்சாவடிகளை மாற்றி அமைப்பது முடியாது. இருப்பினும் அப்பகுதி மக்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்‘ என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. இடத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
இடத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தரக்கோரி - கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தரக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
3. தேனி கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மக்கள்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வீட்டுமனை பட்டா கேட்டு ஏராளமான மக்கள் குவிந்தனர்.
4. மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்ய கோரி, கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பள்ளி மணவர்களை தாக்கியவர்களை கைது செய்ய கோரி, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
5. உயர்மின்கோபுரம் அமைக்கும் இடத்திற்கு அதிகபட்ச இழப்பீடு கேட்டு, தாலியை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த பெண்கள்
பல்லடம் அருகே உயர்மின்கோபுரம் அமைப்பதற்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்கக்கோரி தாலியை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.