மாவட்ட செய்திகள்

தொட்டியம் அருகே மயான பாதையை சீரமைக்கக்கோரி முதியவரின் பிணத்தை நடுரோட்டில் வைத்து மறியல் + "||" + Stir the corpse of the elderly in order to align the delicate path near the thotium

தொட்டியம் அருகே மயான பாதையை சீரமைக்கக்கோரி முதியவரின் பிணத்தை நடுரோட்டில் வைத்து மறியல்

தொட்டியம் அருகே மயான பாதையை சீரமைக்கக்கோரி முதியவரின் பிணத்தை நடுரோட்டில் வைத்து மறியல்
தொட்டியம் அருகே மயான பாதையை சீரமைக்கக்கோரி முதியவரின் பிணத்தை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கூன்ராக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏவுரி(வயது 80). இவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்து போனார். அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நேற்று மாலை அப்பகுதியில் உள்ள காவிரி கரை மயானத்திற்கு தகனம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர்.

மயானத்திற்கு செல்லும் பாதை ஏற்கனவே குண்டும்-குழியுமாக இருந்தது. தற்போது பெய்த மழை காரணமாக மேலும் பழுதடைந்தது. இதனால், பிணத்தை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மயான பாதையை சீரமைக்கக்கோரி ஏவுரியின் பிணத்தை தொட்டியம்-காட்டுப்புத்தூரில் நடுரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்து தொட்டியம் தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மயானப் பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன்பேரில் பிணத்தை எடுத்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. ரே‌‌ஷன்கடை ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் சீர்காழி அருகே போக்குவரத்து பாதிப்பு
சீர்காழி அருகே ரே‌‌ஷன் கடை ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு முஸ்லிம்கள் சாலை மறியல்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. தனி சுடுகாடு அமைத்து தரக்கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் நாகை அருகே நடந்தது
நாகை அருகே தனி சுடுகாடு அமைத்து தரக்கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரி விருத்தாசலத்தில் அரசியல் கட்சியினர் சாலை மறியல்
சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரி விருத்தாசலத்தில் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்க டோக்கன் வழங்காததால் காளைகளுடன் மறியல்
சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்க டோக்கன் வழங்காததால் காளைகளுடன் அதன் உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.