மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு + "||" + Complaints regarding local elections can be reported in 1950

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளான மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தோ்தல் இரண்டு கட்டங்களாக, அதாவது வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 9-ந் தேதி முதல் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரியால், நியமனம் செய்யப்பட்டுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக பெறப்பட்டு வருகின்றன.

புகார்...

எனவே குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி ேதர்தல் தொடர்பாக ஏதாவது குறைகள் மற்றும் புகார்கள் இருப்பின் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ஐ தொடர்பு கொண்டு குறைகள் மற்றும் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

அரசியல் சாசன விதிமுறைகளின்படி உள்ளாட்சி தேர்தலை முறையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் நடத்தி முடித்திட ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்ெ்காள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்
திருவாரூரில் மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.
2. காவிரி டெல்டா பற்றிய அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி பாராட்டு
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
3. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று கூறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
4. மாவட்டத்தில் 4 ஒன்றியங்கள், 87 ஊராட்சிகளில் ஊரக புத்தாக்க திட்டம் கலெக்டர் மெகராஜ் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 87 கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.
5. அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்
பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது.