மாவட்ட செய்திகள்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை - கலெக்டர் தகவல் + "||" + Studying in central government institutions, Student Scholarships - Collector Information

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை - கலெக்டர் தகவல்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை - கலெக்டர் தகவல்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை, 

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மட்டும் பயன்பெற முடியும். மேலும் கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இதற்குரிய விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தரலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2.லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்களை https://sivaganga.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மருதுபாண்டியர் நினைவு தினம்: அஞ்சலி செலுத்த வருபவர்கள் அனுமதி பெற்று வரவேண்டும் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் போலீசாரிடம் அனுமதி பெற்று வரவேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
2. பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருள் வாங்கமுடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருள் பெற சிறப்பு சலுகை - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
பயோமெட்ரிக் முறையில் நியாயவிலை கடைக்கு சென்று அத்தியாவசிய பொருள் பெற முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
3. தீபாவளியையொட்டி கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
4. பொதுமக்கள் வசிக்கும் இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிற்குள் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிற்குள் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
5. மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவு
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.