மாவட்ட செய்திகள்

ஆலங்குளம் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி விவசாயி சாவு + "||" + near Alangulam: Electricity struck and farmer dies

ஆலங்குளம் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

ஆலங்குளம் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குளம், 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகன் அருண் (வயது 31), விவசாயி. இவருக்கு மதி (27) என்ற மனைவியும், கசலா (4) என்ற மகளும், அரசு (1) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் அருண் நேற்று காலையில் தனது வீட்டில் மோட்டார் போடுவதற்காக சுவிட்சை அழுத்தியுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அருண் அந்த இடத்தில் நின்ற நிலையிலேயே இருந்துள்ளார். நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததை கண்ட அருணின் மனைவி, அவரை கூப்பிடவே கண்டுகொள்ளாமல் இருந்ததால் அருகில் சென்று பார்த்தபோது மின்சாரம் தாக்கியது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அருண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டதும் மதி கதறி அழுதார்.

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் அருண் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகிரி அருகே, மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
2. சத்தி அருகே, மின்சாரம் தாக்கி விவசாயி சாவு - உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு
சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. சங்கரன்கோவில் அருகே, மின்சாரம் தாக்கி பெண் சாவு - மாட்டுக்கு புல் அறுக்கச் சென்றபோது பரிதாபம்
சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார். மாட்டுக்கு புல் அறுக்கச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
4. ஓட்டப்பிடாரம் அருகே, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் சாவு
ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார்.
5. தேவர்குளம் அருகே, மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
தேவர்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.