மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலியின் மகளை திருமணம் செய்து தராததால் மூதாட்டி மீது திராவகம் ஊற்றி கழுத்தை அறுத்து கொடூர கொலை + "||" + A brutal slaughter of brutal woman poured on her grandmother for not marrying her daughter

கள்ளக்காதலியின் மகளை திருமணம் செய்து தராததால் மூதாட்டி மீது திராவகம் ஊற்றி கழுத்தை அறுத்து கொடூர கொலை

கள்ளக்காதலியின் மகளை திருமணம் செய்து தராததால் மூதாட்டி மீது திராவகம் ஊற்றி கழுத்தை அறுத்து கொடூர கொலை
மூதாட்டி மீது திராவகம் ஊற்றி, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கட்டிட மேஸ்திரியை பொதுமக்கள் விரட்டி சென்று அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையம் தோப்புக்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தனம் (வயது 65). இவர்களுக்கு ரவிக்குமார், ராஜா, குணசேகரன் என 3 மகன்கள் இருந்தனர். ரவிக்குமாருக்கு திருமணமாகி திவ்யபாரதி, வாசுகி, வசந்தி என 3 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமார் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இதையடுத்து ரவிக்குமாரின் மனைவி விஜயா பள்ளிபாளையத்தில் மகள்களுடன் தங்கி ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது விஜயாவுக்கும், தர்மபுரி மாவட்டம் தடங்கம் அவ்வை நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சாமுவேல்(40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதனால் விஜயாவின் மகள்கள் அவரை விட்டு பிரிந்து சென்றனர். அதில் வாசுகி காதல் திருமணம் செய்து கொண்டார். வசந்தி தனது பாட்டி தனத்துடன் தங்கி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். விஜயா, சாமுவேலுடன் தர்மபுரியில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் சாமுவேல், விஜயாவின் 3-வது மகளான வசந்தியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வசந்தி மற்றும் அவரது பாட்டி தனத்திடம் சாமுவேல் அடிக்கடி தகராறும் செய்து வந்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு சாமுவேல் குருசாமிபாளையம் தோப்புக்காட்டிற்கு திராவக(ஆசிட்) பாட்டிலுடன் சென்று உள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தனத்திடம், வசந்தி எங்கே? எனக் கேட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

ஆனால் வசந்தி இருக்கும் இடத்தை தனம் கூறாததால் ஆத்திரம் அடைந்த சாமுவேல், தனத்தின் மீது திராவகத்தை வீசியதோடு, தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தினார். பின்னர் அவர் கழுத்தை அறுத்தார். இதில் தனம் அந்த இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். முன்னதாக தனத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் முன்பு திரண்ட பொதுமக்கள் இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொதுமக்களின் உதவியோடு சாமுவேலை பிடிக்க முயன்றனர்.

இதனால் சாமுவேல், வீட்டிற்குள் இருந்தவாறு வெளியே நின்றவர்கள் மீது திராவகத்தை ஊற்றி உள்ளார். இதில் பொதுமக்களில் சிலரும், போலீசாரும் காயம் அடைந்தனர். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் சாமுவேலை பிடிக்க முற்பட்டனர். அதற்காக பொதுமக்கள் சிலர் தனத்தின் வீட்டின் ஓட்டை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது சாமுவேல், இறந்த தனத்தின் கழுத்தை மீண்டும் அறுத்துக் கொண்டு இருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கூச்சலிடவே, இன்ஸ்பெக்டர் கணேசன் வீட்டிற்குள் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். ஆனால் துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சாமுவேல் மீண்டும் திராவகம் ஊற்றியதில் இன்ஸ்பெக்டர் கணேசன் காயம் அடைந்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த சாமுவேல் தப்ப முயன்றார். அப்போது பொதுமக்கள் விரட்டியதில் அவர் கீழே தவறி விழுந்தார். இதையடுத்து பொதுமக்கள் சிலர் சாமுவேலை கற்கள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதில் சாமுவேல் அந்த இடத்திலேயே இறந்தார்.

முன்னதாக சாமுவேல் திராவகம் வீசியதில் 4 போலீசார் உள்பட 18 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவி கத்தரிக்கோலால் குத்தி கொலை: ‘கடன் பிரச்சினையால் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தேன்’ கைதான கொத்தனார் வாக்குமூலம்
பூந்தமல்லியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் வீட்டில் வேலை செய்த கொத்தனார் கைது செய்யப்பட்ட நிலையில், நகைக்காக கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2. கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் குத்தி கொலை: ‘கடன் பிரச்சினையால் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தேன்’ கைதான கொத்தனார் வாக்குமூலம்
பூந்தமல்லியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் வீட்டில் வேலை செய்த கொத்தனார் கைது செய்யப்பட்ட நிலையில், நகைக்காக கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
3. நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு கழுத்தை இறுக்கி விவசாயி கொலை 3 பேர் கைது
நடுவீரப்பட்டு அருகே கழுத்தை இறுக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. திண்டுக்கல் அருகே மூதாட்டி வெட்டிக்கொலை வாலிபர் பிடிபட்டார்
திண்டுக்கல் அருகே மூதாட்டியை வாலிபர் வெட்டிக்கொலை செய்தார்.
5. மது பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை: ‘காதலுக்கு இடையூறு செய்ததால் தீர்த்து கட்டினேன்’ கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
காதலுக்கு இடையூறு செய்ததால் நண்பரை மது பாட்டிலால் குத்தி கொன்றேன் என்று வாலிபர் கொலையில் கைதான நண்பர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை