மாவட்ட செய்திகள்

மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி + "||" + Male elephant trapped in electrification near Mettur

மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி

மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி
மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது.
கொளத்தூர்,

சேலம் மாவட்டம், மேட்டூர் வனச்சரகம் கொளத்தூரை அடுத்த பெரிய தண்டா கிமியான் காடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு, விவசாயி. தமிழக-கர்நாடக மாநில வனப்பகுதியை ஒட்டியுள்ள இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் பயரிட்டுள்ளார்.

அதே நேரத்தில் மக்காச்சோளப்பயிரை வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று தீவனத்திற்காக மக்காச்சோளம் பயிரிட்ட தோட்டத்திற்கு வந்தது. அப்போது அங்கிருந்த மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தது.

அடக்கம் செய்தனர்

இது குறித்து தகவல் அறிந்த மேட்டூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன யானையை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டு சம்பவ இடத்திலேயே கால்நடை டாக்டர் மூலம் பிரேத பரிசோதனை நடத்தி அடக்கம் செய்தனர்.

மின்வேலி அமைத்த தங்கவேலுவிடம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எலச்சிபாளையத்தில் கார் மோதி டிரைவர் பலி
எலச்சிபாளையத்தில் கார் மோதி லாரி டிரைவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. சாலையோரம் நின்ற வேன் மீது பஸ் மோதல்; 3 பெண்கள் பலி வடமாநில சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த துயரம்
சாலையோரம் நின்ற வேன் மீது பஸ் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள். மேலும் அவர்களுடன் வந்த 10 பேர் காயம் அடைந்தனர். வடமாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்களுக்கு இந்த துயரம் நிகழ்ந்தது.
3. மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணியில் விபத்து: கான்கிரீட் கலவை லாரி சக்கரத்தில் நசுங்கி 3 தொழிலாளர்கள் பலி
மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்காக இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் ஓய்வுக்காக சற்று நேரம் தூங்கிய போது, கான்கிரீட் கலவை லாரியின் சக்கரத்தில் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
4. நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி அண்ணன்-தங்கை பலி; 7 பேர் படுகாயம்
பள்ளிகொண்டா அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. கரூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்
கரூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.