மாவட்ட செய்திகள்

சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்க திருச்சியில் இருந்து 3 யானைகள் தேக்கம்பட்டி சென்றன + "||" + Three elephants from Thekkampati traveled to Thekkampatti to participate in a special welfare camp

சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்க திருச்சியில் இருந்து 3 யானைகள் தேக்கம்பட்டி சென்றன

சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்க திருச்சியில் இருந்து 3 யானைகள் தேக்கம்பட்டி சென்றன
சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்க திருச்சியில் இருந்து 3 யானைகள் தேக்கம்பட்டிக்கு சென்றன.
ஸ்ரீரங்கம்,

இந்து சமய அறநிலையத்துறையினரால் ஆண்டுதோறும் கோவில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் நலவாழ்வு கருதியும், அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் மற்றும் அதற்கு புத்துணர்வு அளிப்பதற்காகவும் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு யானைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இம்முகாமில் யானைகளுக்கு தினமும் காலை, மாலை நடைபயிற்சியும், பசுந்தீவனம், சத்தான உணவு, ஊட்டச்சத்துடன் கூடிய இயற்கை மருந்துகளும் வழங்கப்படும். இந்தாண்டிற்கான யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 48 நாட்கள் நடைபெறுகிறது.

3 யானைகள்

இதையொட்டி முகாமில் பங்கேற்க திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆண்டாள் யானை, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் அகிலா யானை, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் லட்சுமி யானை ஆகிய 3 யானைகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் அலுவலகம் முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் 3 யானைகளும் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக யானைகள் புறப்பட்ட லாரியை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஸ்ரீரங்கம் கோவில் இணை உதவி ஆணையர் கந்தசாமி, திருவானைக்காவல் கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், மலைக்கோட்டை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான இதய பரிசோதனை முகாம்
பள்ளி சிறார் மருத்துவக்குழு சார்பில், வீரபாண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான இதய பரிசோதனை சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
2. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சிறப்பு துணைத்தேர்வை 2,599 பேர் எழுதினர்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சிறப்பு துணைத்தேர்வை 2,599 பேர் எழுதினர் 758 பேர் பங்கேற்கவில்லை.
3. கெலமங்கலம் அருகே, மழை வேண்டி ஏரியில் தேவதைகளுக்கு சிறப்பு பூஜை 40 கிராம மக்கள் பங்கேற்பு
கெலமங்கலம் அருகே, மழை வேண்டி ஏரியில் கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி 40 கிராம மக்கள் வழிபட்டனர்.
4. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வழிபாட்டிற்காக பக்தர்கள் குவிந்தனர்.
5. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.