மாவட்ட செய்திகள்

பேராவூரணியில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு + "||" + Strong police protection for ballot boxes

பேராவூரணியில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

பேராவூரணியில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
பேராவூரணியில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சி தலைவர், 16 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 163 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குச்சாவடிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு வாக்கு எண்ணும் மையமான பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட 3 அறைகளுக்கு நேற்று காலை 7.30 மணி அளவில் வேட்பாளர்கள், கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர் கோவிந்தராஜன் சீல் வைத்தார்.

பலத்த பாதுகாப்பு

வாக்குப்பெட்டிகள் உள்ள அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை (வியாழக்கிழமை) வாக்கு எண்ணும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த சவுக்கு கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூர் மாவட்டத்தில், 144 தடை உத்தரவு: 1,200 போலீசார் பாதுகாப்பு
144 தடை உத்தரவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2. சேலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
சேலத்தில் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
3. கலப்பு திருமணம் செய்த இளம்பெண் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ஆஜர் அரசியல் கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு
கலப்பு திருமணம் செய்த இளம்பெண் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு அரசியல் கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. சேலத்தில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சேலத்தில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. ‘பார்’ ஊழியர் வெட்டிக்கொலை: 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
‘பார்’ ஊழியர் வெட்டிக்கொலை: 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.