மாவட்ட செய்திகள்

கவுந்தப்பாடியில் என்ஜினீயர் மர்ம சாவு + "||" + Mysterious death of the engineer in Kaundapady

கவுந்தப்பாடியில் என்ஜினீயர் மர்ம சாவு

கவுந்தப்பாடியில் என்ஜினீயர் மர்ம சாவு
கவுந்தப்பாடியில் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கவுந்தப்பாடி, 

கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். பெயிண்டர். இவருைடய மகன் ரமேஷ் என்கிற முத்துக்கோபால் (வயது 27). இவர். என்ஜினீயரிங் முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த முத்துக்கோபால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் உறவினர்கள் அவரை காப்பாற்றி விட்டார்கள். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் பெற்றோரிடம் 200 ரூபாய் வாங்கிக்கொண்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும் பவில்லை. எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை.

இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளி வளாகத்தில் முத்துக்கோபால் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முத்துக்கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

முத்துக்கோபால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை அடித்து கொலை செய்தார்களா? என்று தெரியவில்ைல. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. சிங்கப்பூரில் நடந்த விபத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் பலி
சிங்கப்பூரில் நடந்த விபத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் பலியானார். அவரது உடல் இன்று (புதன்கிழமை) சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.
2. குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் பகிர்ந்த என்ஜினீயர் கைது
குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் பகிர்ந்த என்ஜினீயரை தர்மபுரி டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.
3. தாரமங்கலத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி
தாரமங்கலத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
4. படப்பை அருகே, வடமாநில பெண் மர்ம சாவு - கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
படப்பை அருகே ஒடிசா மாநில இளம்பெண் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. கிண்டியில் இளம்பெண் மர்ம சாவு - கொலையா? போலீஸ் விசாரணை
கிண்டியில் வீட்டுக்குள் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.