மாவட்ட செய்திகள்

காதலிக்க வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி பேராசிரியர் கைது + "||" + Professor arrested for trying to commit suicide by poisoning college student

காதலிக்க வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி பேராசிரியர் கைது

காதலிக்க வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி பேராசிரியர் கைது
காதலிக்க வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக பேராசிரியர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெருமாநல்லூர்,

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் கோவையை சேர்ந்த அசோக்குமார்(வயது 29) என்பவர் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது அசோக்குமார் அந்த மாணவியிடம் நெருங்கி பழகினார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் காதல் விவகாரம் பற்றி அறிந்ததும் மாணவியின் பெற்றோர் மகளை கண்டித்தனர். அதன்பிறகு மாணவி கல்லூரி பேராசிரியருடன் பழகுவதை நிறுத்தினார். ஆனால் அசோக்குமார் மாணவியை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இது பற்றி அறிந்த கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் அசோக்குமாரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. இதை தொடர்ந்து அவர் மாணவியிடம் செல்போனில் தொடர்ந்து பேசி வந்து உள்ளார்.

இந்த நிலையில் மாணவி தன்னுடன் உள்ள காதலை கைவிடும்படி பேராசிரியரிடம் வற்புறுத்தி உள்ளார். அப்போது அவர், நீ என்னை காதலிக்க வேண்டும். என்னை சந்தித்து பேச வேண்டும். இல்லையெனில் நீயும், நானும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் பயந்து போன அந்த மாணவி நேற்று முன்தினம் பெருமாநல்லூர் நால்ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அசோக்குமாரை சந்தித்து உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. உடனே அசோக்குமார், அந்த மாணவியை தன்னை காதலிக்க வேண்டும் என்று மிரட்டி தாக்கி உள்ளார். இதையடுத்து ஓட்டலை விட்டு வெளியே வந்த அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். அக்கம், பக்கத்தினர் மாணவியை மீட்டு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாணவியின் தந்தை பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அசோக்குமாரை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. யாதகிரி அருகே, தேர்வு எழுதிவிட்டு திரும்பியபோது கடத்தி கற்பழிப்பு; கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
யாதகிரி அருகே தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது 4 நபர்களால் கற்பழிக்கப்பட்ட கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
2. கன்னியாகுமரியில் பரபரப்பு கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது; போலீஸ்காரர் பரிதாப சாவு இளம்பெண் உயிர் ஊசல்
கன்னியாகுமரியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது. இதில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். இளம்பெண் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. கல்லூரி மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு: ராமசேனை தலைவர் அறிவிப்பால் சர்ச்சை
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதால் கைதான கல்லூரி மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு என்ற ராமசேனை தலைவர் அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.
4. ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
ஆத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. சுரண்டை அருகே பரிதாபம்: கல்லூரி மாணவி தற்கொலை
சுரண்டை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-