மாவட்ட செய்திகள்

மன்னார்குடி அருகே, அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது + "||" + Near Mannargudi, Ayyappa went to the devotees The car caught fire

மன்னார்குடி அருகே, அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது

மன்னார்குடி அருகே, அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது
மன்னார்குடி அருகே பக்தர்கள் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி தப்பினர்.
மன்னார்குடி, 

மன்னார்குடி அருகே உள்ள தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 30). இவர் தனது காரில் அய்யப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு மன்னார்குடிக்கு சென்று கொண்டிருந்தார். கார் மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் என்ற இடத்தில் சென்றபோது காரில் இருந்து புகை வந்தது. இதைக்கண்ட ராமச்சந்திரன் உடனே காரை நிறுத்தி அதில் இருந்தவர்களை வெறியேற்றினார்.அப்போது கார் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே மன்னார்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கார் முழுவதும் எரிந்து நாசமானது. காரில் பயணமான அனைவரும் அதிர்‌‌ஷ்டவசமாக எந்தவித காயமின்றி தப்பினர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூரில் மரக்கடையில் தீ விபத்து
திருவள்ளூரில் மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
2. ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து: 3 நோயாளிகள் உடல் கருகி சாவு
ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
3. சீனாவில் ‘ஷூ பாலிஸ்’ தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து: 2 பேர் உடல் கருகி பலி
சீனாவில் ‘ஷூ பாலிஸ்’ தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் உடல் கருகி பலியாயினர்.
4. ஈரோட்டில் குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துண்டுகள் எரிந்து நாசம்
ஈரோட்டில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துண்டுகள் எரிந்து நாசம் ஆனது.
5. தென் கொரியாவில் கட்டுமான தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 பேர் பலி
தென் கொரியாவில் கட்டுமான தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.