மாவட்ட செய்திகள்

ஓடும் ரெயிலில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு + "||" + On the running train To godmother The jewelry was seized Young men 3 years in prison

ஓடும் ரெயிலில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு

ஓடும் ரெயிலில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
திருப்பூர் அருகே ஓடும் ரெயிலில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோவை,

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பானுமதி (வயது 66). இவர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 13-ந் தேதி குடும்பத்தினருடன் கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு சுற்றுலா சென்றார். இதற்காக அவர் சேலத்தில் இருந்து யஷ்வந்த்பூர்- கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

அந்த ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நின்று புறப்பட்டது. அப்போது பானுமதி அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்த ஒரு மர்ம ஆசாமி ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோவை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பானுமதியிடம் தங்க சங்கிலியை பறித்ததாக மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த உத்தம்பட்டேல் (34 )என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு கோவை 6-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கண்ணன், மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறித்த வடமாநில வாலிபர் உத்தம்பட்டேலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் தங்கராஜ் ஆஜரானார். உத்தம்பட்டேல் மீது வேலூர் உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சொத்து குவிப்பு வழக்கு: வட்டார போக்குவரத்து அதிகாரி-மனைவிக்கு 4 ஆண்டு சிறை
சொத்து குவிப்பு வழக்கில் வட்டார போக்குவரத்து அதிகாரி மற்றும் அவருடைய மனைவிக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
2. போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் 11 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு டிசம்பர் 13-ந்தேதி நடக்கிறது
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் 11 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு வருகிற டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
3. ஊராட்சி முன்னாள் தலைவர் வீட்டில் நகை பறித்த வழக்கு: 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை
ஊராட்சி முன்னாள் தலைவர் வீட்டில் நகை பறித்த வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வலங்கைமான் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
4. நாகர்கோவில் ஜெயிலில் கைதிக்கு கொரோனா சிறை அதிகாரிகள் உள்பட 150 பேருக்கு பரிசோதனை
நாகர்கோவில் ஜெயிலில் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் உள்பட 150 பேருக்கு சளி, மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.
5. கடலூரில் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
கடலூரில் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.