மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் தினத்தையொட்டி 16-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் சிவன்அருள் தகவல் + "||" + By Thiruvalluvar Day Holidays for Toss Mag shops on the 16th Collector Shiva Arul Information

திருவள்ளுவர் தினத்தையொட்டி 16-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் சிவன்அருள் தகவல்

திருவள்ளுவர் தினத்தையொட்டி 16-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் சிவன்அருள் தகவல்
திருவள்ளுவர் தினத்தையொட்டி 16-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் 16-ந் தேதி (வியாழக்கிழமை) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும். அன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல், அன்றைய தினத்தில் டாஸ்மாக் மதுபான கூடங்கள் திறக்கப்பட்டிருந்தாலோ, பார்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலோ, மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு 1,000 படுக்கை வசதி - கலெக்டர் சிவன்அருள் பேட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக 1000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.
2. திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்தார்.
3. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் கொரோனா தனிவார்டு - கலெக்டர் சிவன்அருள் ஆய்வு
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா வைரசுக்கான வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டை கலெக்டர் சிவன்அருள் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
4. நிலுவையில் உள்ள குடிமராமத்து பணிகளை அடுத்த வார இறுதிக்குள் முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குடிமராமத்து பணிகளை அடுத்த வார இறுதிக்குள் முடிக்காவிட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சிவன்அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. திருப்பத்தூர் மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் தனிவார்டு அமைப்பு - கலெக்டர் சிவன்அருள் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கலெக்டர் சிவன்அருள் கூறினார்.