மாவட்ட செய்திகள்

உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு + "||" + 10¼ pound jewelery stolen from door of house in Urayur

உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு

உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு
திருச்சி உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,

திருச்சி உறையூர் சீனிவாச நகர் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 61). இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ராமேசுவரம் கோவிலுக்கு சென்றார். பின்னர் 9-ந் தேதி இரவு அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் நுழைவு வாயில் இரும்பு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டிற்குள் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனை கண்ட கணேசன் அதிர்ச்சியடைந்தார்.

அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10¼ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தன. இது குறித்து உறையூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டி நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் தடயங்களை போலீசார் சேகரித்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

போலீசார் வலைவீச்சு

இந்த சம்பவம் தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி, நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களை தாக்கி 16 பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
கீழ்வேளூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களை தாக்கி பெண்கள் அணிந்திருந்த தாலி சங்கிலி உள்பட 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. மன்னார்குடி அருகே கோவில் உண்டியல் திருட்டு 4 பேருக்கு வலைவீச்சு
மன்னார்குடி அருகே கோவில் உண்டியலை திருடி சென்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
3. குளச்சல் அருகே நள்ளிரவில் துணிகரம்: கப்பல் ஊழியர் வீட்டில் 21 பவுன் நகைகள் கொள்ளை
குளச்சல் அருகே கப்பல் ஊழியர் வீட்டில் நள்ளிரவில் 21 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் 4 வீடுகளில் திருட முயற்சி நடந்துள்ளன.
4. சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில் ரூ.10 லட்சம் எந்திரங்கள் திருட்டு - உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
வங்கி கடனை திரும்ப செலுத்தாததால் சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள எந்திரங்களை ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர் திருடிச்சென்றனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
5. கோ.பூவனூர் வரதராஜ பெருமாள் கோவில் பூட்டை உடைத்து திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விருத்தாசலம் அருகே கோ. பூவனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.