மாவட்ட செய்திகள்

காட்ரம்பாக்கம் ஊராட்சியில் ரேஷன் கடை வாசலில் தேங்கியுள்ள கழிவுகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை + "||" + In the Katrampakam panchayat Stacks of waste at the ration shop door Public demand for action

காட்ரம்பாக்கம் ஊராட்சியில் ரேஷன் கடை வாசலில் தேங்கியுள்ள கழிவுகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

காட்ரம்பாக்கம் ஊராட்சியில் ரேஷன் கடை வாசலில் தேங்கியுள்ள கழிவுகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
காட்ரம்பாக்கம் ஊராட்சியில் ரேஷன் கடை வாசலில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்ரம்பாக்கம் ஊராட்சியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ரேஷன்கடையில் அந்த பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த ரேஷன்கடை வாசலில், கழிவுகள் மற்றும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-

பொதுமக்கள் சாப்பிட பயன்படுத்த கூடிய உணவு பொருட்கள் இருக்கும் இந்த ரேஷன் கடை வாசலில் கிடக்கும் சாண கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாண கழிவுகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.