மாவட்ட செய்திகள்

புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி அண்ணன்-தம்பி பரிதாப சாவு + "||" + Annan-Thampi Paritabha died in a sea wave at a tourist destination in Puthiya

புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி அண்ணன்-தம்பி பரிதாப சாவு

புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி அண்ணன்-தம்பி பரிதாப சாவு
புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.
காலாப்பட்டு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு கஜேந்திராநகர் பகுதியை சேர்ந்தவர்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் 3 பஸ்களில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டனர். வழியில் பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்த அவர்கள் நேற்று காலை மேல்மருவத்தூர் கோவிலில் தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்தனர். வழியில் ஆரோவில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு பிள்ளைச்சாவடி கடற்கரை பகுதிக்கு வந்தனர். பஸ்சை அங்கு நிறுத்தி விட்டு சிலர் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். பெண்கள், சிறுவர்கள், வாலிபர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.

கடலில் மூழ்கிய அண்ணன்-தம்பி

இதில் கார்த்திக்(வயது26), முனிராஜ்(17), ரமேஷ்(21), கவுதம்(22), விவேக்(19) ஆகிய 5 பேரும் சற்று தூரம் நடந்து சென்று காலாப்பட்டு கடல் பகுதியில் சென்று குளித்தனர். அண்ணன்-தம்பியான கவுதம், விவேக் இருவரும் சற்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி இருவரும் கடலில் மூழ்கினர்.

இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என அலறினர். அவர்களது சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த மீனவர்கள், கடலில் குதித்து அலையில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். கடலில் மூழ்கியவர்களை மீட்க அவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மாலையில் பொம்மையார்பாளையம் கடற்கரையில் கவுதம், விவேக் ஆகியோரது உடல்கள் கரை ஒதுங்கின. உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி அண்ணன், தம்பி பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் பரிதாப சாவு
சங்கரன்கோவிலில் மோட்டார் சைக் கிள்-சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், என்ஜினீயர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
2. ராய்ச்சூர் அருகே மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரசாயன கசிவு; புதுமாப்பிள்ளை சாவு மேலும் 4 பேர் கவலைக்கிடம்
ராய்ச்சூர் அருகே, மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டது. இதில் புதுமாப்பிள்ளை இறந்தார். மேலும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
3. பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற 5 பேரை சரமாரியாக கத்தியால் குத்திய தொழிலாளி வாலிபர் சாவு; 4 பேருக்கு சிகிச்சை
பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற 5 பேரின் வயிற்றில், சரமாரியாக கத்தியால் தொழிலாளி ஒருவர் குத்தினார். இதில் வாலிபர் ஒருவர் இறந்தார். 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. அம்பை அருகே ஊருக்குள் புகுந்த யானை திடீர் சாவு
அம்பை அருகே ஊருக்குள் புகுந்த யானை திடீரென்று இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. குடிபோதையில் பெற்றோரிடம் தகராறு கோடரியால் வெட்டி வாலிபர் படுகொலை தம்பி கைது
ஹாவேரி அருகே, குடிபோதையில் பெற்றோரிடம் தகராறு செய்த வாலிபரை, கோடரியால் வெட்டி அவரது தம்பியே படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின் தம்பியை கைது செய்தனர்.