மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் காயம் உறவினர்கள் சாலைமறியல் + "||" + Relatives of a bus collider youth injured on a motorcycle

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் காயம் உறவினர்கள் சாலைமறியல்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் காயம் உறவினர்கள் சாலைமறியல்
கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பாகூர்,

கிருமாம்பாக்கம் அடுத்த சார்காசிமேடு பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 26). இவர் பெட்ரோல் நிரப்புவதற்காக பிள்ளையார்குப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்குக்கு நேற்று மாலை வந்தார். பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வீடு திரும்ப கடலூர் - புதுச்சேரி சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சாலைமறியல்

அருண் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் சார்காசிமேடு பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து புதுச்சேரி - கடலூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் விபத்து ஏற்படுத்திவிட்டு அங்கே நின்ற தனியார் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

தகவல் அறிந்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், அதிவேகமாக பஸ்கள் செல்வதை தடுக்கவேண்டும் என்றனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதிஅளித்தனர். அதன்பேரில் அவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலைமறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்; 175 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 175 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. தூத்துக்குடியில் எலக்ட்ரீசியன் சாவு: போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
தூத்துக்குடியில் விபத்தில் இறந்த எலக்ட்ரீசியனின் உறவினர்கள், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை உறவினர்கள் போராட்டம்
போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த ஆட்டோ டிரைவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் தாக்கியதால்தான் அவர் தற்கொலை செய்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. அவினாசி அருகே விபத்தில் பலியான மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
அவினாசி அருகே விபத்தில் பலியான மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
5. தஞ்சை அருகே பரிதாபம்: வங்கி முன்பு தீக்குளித்த தொழிலாளி சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா
தஞ்சை அருகே வங்கி முன்பு தீக்குளித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.