மாவட்ட செய்திகள்

புகை இல்லாத போகி கொண்டாட வேண்டும் - கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தல் + "||" + Smoking The absence Bogie needs to celebrate Collector Prabhakar Instruction

புகை இல்லாத போகி கொண்டாட வேண்டும் - கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தல்

புகை இல்லாத போகி கொண்டாட வேண்டும் - கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தல்
புகை இல்லாத போகியை கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி, 

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் நாம் போகி பண்டிகை கொண்டாடுகிறோம். இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பதென்பது பழையன கழிதல் என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடப்பங்கள், தேவையற்ற கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.

ஆனால் தற்போது, போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்கையில் நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு, மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுப்பட்டு, நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலை போக்குவரத்திற்கு தடையும் ஏற்படுகிறது. இது போன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும், நீதிமன்றம் பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புகை நமக்கு பகை என்பதை உணர்ந்து போகி பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்க வேண்டாம். மேலும் போகி பண்டிகையை புகை இல்லாமலும், பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசு இல்லாமலும் கொண்டாடுவோம் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கிரு‌‌ஷ்ணகிரியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
கிரு‌‌ஷ்ணகிரியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
2. தகுதி உள்ள தம்பதியர்கள் தகுந்த ஆவணங்களை காட்டி குழந்தைகளை தத்தெடுக்கலாம் -கலெக்டர் பிரபாகர் தகவல்
தகுதி உள்ள தம்பதியர்கள் தகுந்த ஆவணங்களை காட்டி குழந்தைகளை தத்தெடுக்கலாம் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளா்.
3. அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெற சத்துணவு, அங்கன்வாடி பெண் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் பிரபாகர் தகவல்
அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெற சத்துணவு, அங்கன்வாடி பெண் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. காய்கறிகள், பழங்கள் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம் - கலெக்டர் தகவல்
காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5. மாவட்டத்தில், ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்கும் நடவடிக்கை தீவிரம் - கலெக்டர் பிரபாகர் தகவல்
கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கலெக்டர் பிரபாகர் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை