மாவட்ட செய்திகள்

மாசு இல்லாத போகி பண்டிகை கொண்டாடுங்கள் - கலெக்டர்கள் வேண்டுகோள் + "||" + Celebrate the pollution-free Poki festival Request for collectors

மாசு இல்லாத போகி பண்டிகை கொண்டாடுங்கள் - கலெக்டர்கள் வேண்டுகோள்

மாசு இல்லாத போகி பண்டிகை கொண்டாடுங்கள் - கலெக்டர்கள் வேண்டுகோள்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொதுமக்கள் மாசு இல்லாத போகி பண்டிகையை கொண்டாட கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
பெரம்பலூர், 

அறுவடை திருநாளை தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். தைப்பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக “பழையன கழிதலும், புதியன புகுதலுமாக“ கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில் தமிழர்கள் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களையும், தங்கள் வசமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர்.

இத்தகைய செயற்கை பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், பியூரான் மற்றும் நச்சுத்துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.

மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும் ஏற்படுகிறது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகிறது. இதனால் பார்க்கும் திறன் குறைபடுகிறது. இதுபோன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே போகிப்பண்டிகையான இன்று (செவ்வாய்க்கிழமை) பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப்பொருட்களைக் எரிக்காமல், குப்பைகளை முறைப்படி அகற்றி போகி பண்டிகையை மாசு இல்லாமலும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), ரத்னா (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடுகளை கலெக்டர் சாந்தா ஆய்வு
பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட கல்பாடி ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.
2. அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் நடவடிக்கை - கலெக்டர் சாந்தா எச்சரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா எச்சரித்துள்ளார்.
3. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விதித்த அபராத தொகை செலுத்தாத கடைகளின் பதிவு சான்றிதழ் ரத்து - கலெக்டர் சாந்தா எச்சரிக்கை
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விதித்த அபராத தொகையை செலுத்தாத கடைகளின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. வலைகள்- பரிசல்கள் மானியத்தில் வாங்க மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்
வலைகள்– பரிசல்கள் மானியத்தில் வாங்க மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறியுள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
5. பெரம்பலூர் மாவட்டத்தில், 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி - கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்
பெரம்பலூர் மாவட்டத்தில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணியை கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,