மாவட்ட செய்திகள்

சின்னசாவடி குளத்தில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை + "||" + The public demand to remove the ayatamaramarai in Chinnasawadi pond

சின்னசாவடி குளத்தில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

சின்னசாவடி குளத்தில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
சின்னசாவடி குளத்தில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக்கூர்,

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள மடப்புரம் ஊராட்சியில் சின்னசாவடி குளம் உள்ளது. இந்த குளம் அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் பெரிதும் பயன்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது குளத்தை ஆகாயத்தாமரைகள் அடர்ந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆக்கிரமித்து உள்ளது. இதனால் குளத்தில் தண்ணீர் மாசு அடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் தொற்று நோய் ஏற்படுமோ? என அச்சப்படுகின்றனர். மேலும் குளத்தின் படித்துறைகள் இடிந்து கிடக்கின்றன.

ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்

சாலை ஓரத்தில் குளத்தின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட காரணங்களால் பொதுமக்கள் முழுமையாக குளத்தை பயன்படுத்த முடியவில்லை. எனவே குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, புதிய படித்துறைகளை அமைக்க வேண்டும்.

மேலும் சாலை ஓரத்தில் குளத்தில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை தடுக்க சிமெண்டு கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெண்மணி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு
வெண்மணி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன.
2. நிதிநிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி: விசாரணை அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
நிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு சென்ற போலீஸ் அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிந்து நெற்பயிர் நாசம் இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை
கொரடாச்சேரி அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிந்து நெற்பயிர் நாசமானது. இதனால் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
4. குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கூறி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
5. அறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
அறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை.

அதிகம் வாசிக்கப்பட்டவை