மாவட்ட செய்திகள்

காதலிக்க பெண் மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Because the girl refused to love Plaintiff committed suicide by hanging

காதலிக்க பெண் மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலிக்க பெண் மறுத்ததால்  வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
காதலிக்க பெண் மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நல்லூர்,

திருப்பூர் செரங்காடு கிழக்கு சிவன் நகரை சேர்ந்த தங்கமணி மகன் சந்தோஷ் (வயது 23). பட்டதாரி. இவர் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் அவரை காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களாக சந்தோஷ் மனமுடைந்த காணப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் நேற்று மதியம் வீட்டுக்கு வந்த தங்கமணி வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால்தட்டி பார்த்து சத்தம் போட்டுள்ளார். வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தூக்கில் சந்தோஷ் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனே அருகில் உள்ளவர்கள் உதவியுடன் சந்தோசை மீட்டு திருப்பூர் அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தோஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் பெண் காதலிக்க மறுத்ததால், மனம் உடைந்த சந்தோஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.