மாவட்ட செய்திகள்

அரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை - சித்தராமையா பேட்டி + "||" + BJP does not have faith in the Constitution - Siddaramaiah Interview

அரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை - சித்தராமையா பேட்டி

அரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை - சித்தராமையா பேட்டி
அரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி கிடையாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்களுக்கு இது தக்க பாடமாக அமையும். நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு இத்தகைய தண்டனை கிடைக்க வேண்டும்.

கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி விஷயங்களில் கட்சி மேலிடம் சரியான முடிவு எடுக்கும். நமது தேசத்திற்காக ஏராளமானவர்கள் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தால் நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. நமது அரசியல் சாசனம் மிக சிறப்பானது.

பா.ஜனதாவினருக்கு அரசியல் சாசனம் மீது நம்பிக்கை இல்லை. அதனால் இந்த அரசியல் சாசனத்தை மாற்றுவதாக கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் அம்பேத்கர் உருவாக்கிய இந்த அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் பணியை செய்வோம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாடு ஆபத்தில் உள்ளது என்று சித்தராமையா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 68% பேர் மீது கிரிமினல் வழக்குகள்; 81% பேர் பணக்காரர்கள்
பீகாரில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 68 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. 81 சதவீதம் பேர் பணக்காரர்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்க அறிக்கை தெரிவிக்கிறது.
2. பீகார் தேர்தல் முடிவுகள்: பா.ஜனாதா - நிதிஷ் கூட்டணி தொடர்ந்து பெரும்பான்மை இடங்களில் முன்னிலை
243 தொகுதிகள் உள்ள பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை அமைக்க 122 இடங்கள் தேவை பீகார் மாநிலத்தை ஆளப்போவது யார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.
3. பீகார் தேர்தல் பா.ஜனதா அதிக இடங்களில் முன்னிலை; நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவாரா பா.ஜனதா என்ன சொல்கிறது
பீகார் தேர்தலில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் 42 இடங்களில் 500 வாக்குகளும், 74 இடங்களில் 1000 வாக்குகளும் வித்தியாசத்தில் முன்னிலையில் தான் உள்ளன.
4. கைதான பாஜகவினர் திடீர் சாலை மறியல்... போலீஸ் அதிகாரி சட்டையை பிடித்து வாக்குவாதம்
திருமண மண்டபத்தில் வசதி இல்லை... கைதான பாஜகவினர் திடீர் சாலை மறியல் - போலீஸ் அதிகாரி சட்டையை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
5. பீகாரில் உள்ள அனைத்து பெண்களும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர் - பிரதமர் மோடி
பீகாரில் உள்ள அனைத்து பெண்களும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர் என 3வது கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை