மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் + "||" + Pay equal pay to civil servants Struggle to besiege Task Force headquarters

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்
அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலையில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்ட கிளை தொடக்க விழா மற்றும் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜி.சிவா, பொது செயலாளர் எம்.ராஜா, சிறப்பு தலைவர் மற்றும் சட்ட ஆலோசகர் கே.பாரதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில், 17 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் விற்பனையாளர்களின் மீதான ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள், அபராத தொகைகள் மற்றும் பணியிடம் மாற்றம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

இறந்த பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் கருணைத்தொகை மற்றும் அவரது குடும்ப வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். 

அரசின் கொள்கைப்படி டாஸ்மாக் கடைகளை மூடினால் ஊழியர்களுக்கு அரசுத்துறையில் மாற்று வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.