மாவட்ட செய்திகள்

தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - கலெக்டர் ரத்னா திறந்து வைத்தார் + "||" + Collector Rathna inaugurated the Direct Paddy Purchasing Station at Duttur Village

தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - கலெக்டர் ரத்னா திறந்து வைத்தார்

தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - கலெக்டர் ரத்னா திறந்து வைத்தார்
தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ரத்னா திறந்து வைத்தார்.
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், தூத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை கலெக்டர் ரத்னா திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். 

அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், அரியலூர் மாவட்டத்தில் நடப்பு காரீப்பருவ நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் அரியலூர் தாலுகா தூத்தூர் மற்றும் உடையார்பாளையம் தாலுகா கோடாலிக்கருப்பூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களை அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். 

அப்போது அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, மண்டல மேலாளர் உமாசங்கர் மகேஸ்வரன், வேளாண்மை அலுவலர் வடிவேல், தாசில்தார் கலைவாணன், ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், வருவாய் ஆய்வாளர் பொன்பகவதிராஜ் மற்றும் விவசாயிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? அரியலூர் கலெக்டர் விளக்கம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டில் உள்ளவர்கள் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரியலூர் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
2. அரியலூர் மாவட்டத்தில், 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - கலெக்டர் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் ரத்னா கூறினார்.
3. வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
அரியலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ரத்னா கேட்டுக் கொண்டுள்ளார்.
4. பட்டு விவசாயிகளுக்கு ஊக்கப்பரிசு ; கலெக்டர் வழங்கினார்
பட்டு விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா ஊக்கப்பரிசு வழங்கினார்.
5. காலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும்; கலெக்டர் ரத்னா அறிவுறுத்தல்
காலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும் என்று நுகர்வோருக்கு கலெக்டர் ரத்னா அறிவுறுத்தி உள்ளார்.