மாவட்ட செய்திகள்

வேலூர் அருகே நின்றிருந்த வேன்மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி + "||" + Near Vellore On the van that was standing Auto collision driver kills

வேலூர் அருகே நின்றிருந்த வேன்மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி

வேலூர் அருகே நின்றிருந்த வேன்மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி
வேலூர் அருகே நின்றிருந்த வேன் மீது ஆட்டோ மோதியதில் டிரைவர் பலியானார்.
வேலூர்,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை வேப்பூரில் இருந்து வேலூருக்கு ஆட்டோ ஓட்டிவந்தார். ஆட்டோவில் வேறு பயணிகள் யாரும் இல்லை.

வேலூரையடுத்த வள்ளலார் பகுதியில் உள்ள மேம்பாலத்தை கடந்துவந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த வேனின் பின்பகுதியில் ஆட்டோ மோதியது.

இதில் ஆட்டோவின் முன்பகுதி நொறுங்கியது. மேலும் ஆட்டோவை ஓட்டிவந்த ஜீவானந்தத்தின் தலையில் நெற்றிக்கு மேல் உள்ள பகுதி துண்டாகி ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் விரைந்து சென்று ஜீவானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.