மாவட்ட செய்திகள்

ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரி கைது + "||" + Municipal officer arrested for accepting Rs. 12,000 bribe

ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரி கைது

ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரி கைது
ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
மும்பை, 

மும்பை காந்திவிலி ஆர் தெற்கு வார்டு மாநகராட்சி அதிகாரியாக இருந்து வருபவர் சஞ்சீவ் வல்சந்திரா. இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்யும் வியாபாரிகளின் உடைமைகளை பறிமுதல் செய்து உள்ளார். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு காய்கறி வியாபாரி, அதிகாரி சஞ்சீவ் வல்சந்திராவை சந்தித்து தனது உடைமைகளை திரும்பி தரும்படி கோரினார். இதற்கு அதிகாரி ரூ.12 ஆயிரம் லஞ்சமாக தந்தால் திருப்பி தருவதாக தெரிவித்தார். பணம் தருவதாக கூறிய வியாபாரி சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் யோசனைப்படி வியாபாரி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த அதிகாரியை சந்தித்து பணத்தை கொடுத்தார். பணத்தை பெற்ற அதிகாரி சஞ்சீவ் வல்சந்திராவை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் ஜவுளிக்கடைக்காரர் வீட்டில் திருடிய 2 பேர் கைது
திருப்பூரில் ஜவுளிக்கடைக்காரர் வீட்டில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-
2. உத்தரபிரதேச போலீசார் கொலையில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் 8 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
3. போலீசார் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே கைது: மத்திய பிரதேசத்தில் சிக்கினான்
உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 8 போலீஸ்காரர்கள் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.
4. திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது
திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
5. ராமேசுவரத்தில் தந்தை அடித்து கொலை; வாலிபர் கைது
ராமேசுவரத்தில் தந்தையை அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.