மாவட்ட செய்திகள்

ரூ.7 கோடி மோசடி வழக்கில் அரசு பெண் ஊழியர் கைது; விமான நிலையத்தில் சிக்கினார் + "||" + Government employee arrested in Rs 7 crore fraud case Trapped at the airport

ரூ.7 கோடி மோசடி வழக்கில் அரசு பெண் ஊழியர் கைது; விமான நிலையத்தில் சிக்கினார்

ரூ.7 கோடி மோசடி வழக்கில் அரசு பெண் ஊழியர் கைது; விமான நிலையத்தில் சிக்கினார்
மும்பையை சேர்ந்தவர் திரிஷா பட்டேல் (வயது50). அரசு ஊழியராக இருந்து வருகிறார். இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு ரூ.7 கோடி மோசடி செய்ததாக எல்.டி மார்க் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரை தொடர்ந்து திரிஷா பட்டேல் தலைமறைவாகி விட்டார்.
மும்பை, 

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் துபாய்க்கு தப்பி சென்றதாக தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தப்பி சென்ற திரிஷா பட்டேல் சம்பவத்தன்று மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் விமான நிலையம் சென்று அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 4 பேர் கைது
பண்ருட்டியில் வீட்டில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. திருக்கோவிலூர் அருகே வாலிபர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே உள்ள மேலத்தாழனூர் மதுரா சின்னசெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 35). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அண்ணாதுரை மகன்கள் தங்கதுரை (29), கார்த்தி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
3. அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நண்பரை கொல்ல முயற்சி ; வாலிபர் கைது
திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நண்பரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மிரட்டல்; 2 பேர் கைது
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் அசோகன். சம்பவத்தன்று இவர் கல்லாவி அருகே கொல்லப்பட்டியில் ஊராட்சி தண்ணீர் தொட்டி அருகில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.
5. தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல்; 4.92 லட்சம் பேர் கைது
தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்ட 4.92 லட்சம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.