மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சர் விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஷில்பா தகவல் + "||" + First Minister can apply for Sports Award - Collector Shilpa Information

முதல்-அமைச்சர் விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்

முதல்-அமைச்சர் விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்
முதல்-அமைச்சர் விளையாட்டு விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை, 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளை சிறப்பிக்கும் வகையில் 2 வீரர்கள், 2 வீரங்கனைகள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர்கள் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது, பரிசு தொகை ரூ.1 லட்சமும், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்க பதக்கமும், பாராட்டு பத்திரம் ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்த விருது ஆண்டுக்கு 3 வருடங்களுக்கு முன்பு விளையாட்டில் சாதனை படைத்த விவரங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இது தவிர விளையாட்டு போட்டிகள் நடத்தும் நிர்வாகி, நன்கொடையாளருக்கும், போட்டி நடுவர்களுக்கும் இது போன்று விருது வழங்கப்படும்.

இந்த விருது பெறக்கூடியவர் தமிழ்நாட்டில் வசிக்கவேண்டும். 2 முறை தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர். இந்த விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பபடிவத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தின் மூலம் www.sdat.tn.gov.in பெற்றுக்கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வருகிற 10-ந்தேதிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலருக்கு வந்து சேரும்படி அனுப்பவேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விமானம், கப்பல் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு 3,640 பேர் வந்துள்ளனர் - கலெக்டர் ஷில்பா தகவல்
விமானம், கப்பல் மூலம் இதுவரை 3,640 பேர் நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளனர் என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.
3. வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்களுக்கு 2-வது கட்டமாக வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை - கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்
வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்களுக்கு 2-வது கட்டமாக வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்வதை கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.
4. நெல்லை மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால அவகாசம் - கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
5. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் விவசாய பணி சம்பந்தமாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமான நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விவசாய பணி சம்பந்தமாக வேளாண்மை அதிகாரிகளின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கலெக்டர் ஷில்பா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–