மாவட்ட செய்திகள்

கோவா மந்திரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வியாபாரி கைது + "||" + Dealer arrested for trying to extort money from Goa minister

கோவா மந்திரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வியாபாரி கைது

கோவா மந்திரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வியாபாரி கைது
கோவா மந்திரிக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற மும்பை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
மும்பை, 

கோவா மாநிலத்தின் பொதுப்பணித்துறை மந்திரிக்கு கடந்த மாதம் செல்போனில் அழைப்பு வந்தது. இதில் பேசிய ஆசாமி, தான் தாதா பேசுவதாகவும், தங்களுக்கு உடனடியாக பணம் தரவேண்டும் என்றும், இல்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக மந்திரி கடந்த மாதம் 21-ந்தேதி பனாஜி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். செல்போன் நம்பர் மூலம் ஆய்வு நடத்தியதில், அந்த மிரட்டல் அழைப்பு மும்பை காந்தி விலியில் இருந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கோவா போலீசார் மும்பை விரைந்தனர். இங்கு நடத்திய விசாரணையில் காந்திவிலி ரகுலீலா வணிகவளாகத்தில் கடை நடத்தி வந்த வியாபாரி மணிஷ் ஷா (வயது40) என்பவர் தான் மிரட்டல் அழைப்பு விடுத்ததும், பல முறை பொதுப்பணித்துறை மந்திரிக்கு அழைப்பு விடுத்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்த னர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவா அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி அடித்துக்கொலை
சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த தாய், மகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
2. நாமக்கல் அருகே நிலத்தரகர் கொலையில் 5 பேர் கைது
நாமக்கல் அருகே நிலத் தரகர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. வீட்டில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 4 பேர் கைது
பண்ருட்டியில் வீட்டில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. திருக்கோவிலூர் அருகே வாலிபர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே உள்ள மேலத்தாழனூர் மதுரா சின்னசெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 35). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அண்ணாதுரை மகன்கள் தங்கதுரை (29), கார்த்தி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
5. அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நண்பரை கொல்ல முயற்சி ; வாலிபர் கைது
திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நண்பரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.