மாவட்ட செய்திகள்

கோவையில், 100 கிலோ கலப்பட நெய் பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை + "||" + In Coimbatore, 100 kg of adulterated Confiscation of ghee

கோவையில், 100 கிலோ கலப்பட நெய் பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கோவையில், 100 கிலோ கலப்பட நெய் பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கோவையில் 100 கிலோ கலப்பட நெய்யை பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கோவை,

கோவை மாநகர பகுதிகளில் கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் கோவை மாநகரம், சுண்டகாமுத்தூர் ரோடு, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 100 கிலோ கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:-

கோவை குனியமுத்தூர், சுண்டக்காமுத்தூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வெண்ணெய், பாமாயில் மற்றும் வனஸ்பதி கலந்து கலப்பட நெய் தயாரித்து உள்ளனர். பின்னர் இந்த கலப்பட நெய், டப்பாக்களில் அடைக்கப்பட்டு, கோவை மாநகர பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது. ஹம்சா (வயது 32), ஈஸ்வரி (49), ராஜாமணி(40), கலா (30), மனிஷ்கா (32), அழகுபாண்டி (30), ராஜேஸ்வரி (65), முத்துராக்கு (50) ஆகிய 8 பேர் கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்வது கண்டறிப்பட்டது. அவர்களிடம் இருந்து 100 கிலோ கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்ட உள்ளது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும்.

மேற்கண்ட நபர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவுகள் 55 மற்றும் 58-ன் கீழ் மாவட்ட வருவாய் அதிகாரி அனுமதியுடன் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோ நெய், வெள்ளலூரில் உள்ள கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் பயோ கியாஸ் ஆலைக்கு மூலப்பொருளாக வழங்கி அழிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி வழியாக சேலத்திற்கு மினி லாரியில் கடத்திய ரூ.6 லட்சம் குட்கா பறிமுதல்
கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலத்திற்கு காய்கறி ஏற்றி சென்ற மினிலாரியில் கடத்திய ரூ.6 லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2. சேலத்தில் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: மாவு மில் தொழிலாளி கைது
சேலத்தில் 400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மாவு மில் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
3. மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் தடுப்பு கம்பியை தலையால் முட்டித்தள்ளிய வாலிபர்
தேனியில் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்த விரக்தியில், சாலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு கம்பியை வாலிபர் ஒருவர் தலையால் முட்டித் தள்ளினார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
4. பிறமாநிலங்கள் சென்று வேலூர் திரும்பும் டிரைவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்தால் வாகனங்கள் பறிமுதல்
பிறமாநிலங்களுக்கு சென்று வேலூர் திரும்பும் டிரைவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. அனுமதி இல்லாமல் விற்பனை: திண்டுக்கல்லில் 600 கிலோ இறைச்சி பறிமுதல்
திண்டுக்கல்லில் அனுமதி இல்லாமல் விற்பனைக்கு வைத்து இருந்த 600 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.