மாவட்ட செய்திகள்

21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் - கலெக்டர் ரத்னா தகவல் + "||" + 21 Direct Paddy Procurement Centers will be in operation from tomorrow - Collector Ratna Information

21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் - கலெக்டர் ரத்னா தகவல்

21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் - கலெக்டர் ரத்னா தகவல்
21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் என்று கலெக்டர் ரத்னா கூறினார் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில், கே.எம்.எஸ். திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் சம்பா பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 21 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

அதன்படி அரியலூர் தாலுகாவிற்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, விளாகம், பளிங்காநத்தம், இலந்தைக்கூடம், குருவாடி, காமரசவள்ளி, ஓரியூர், ஏலாக் குறிச்சி, கள்ளுர், கீழக்கொளத்தூர், திருவெங்கனூர், நானாங்கூர், திருமானூர், வடுகபாளையம், அழகியமணவாளன், கீழவரப்பன்குறிச்சி ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட அண்ணகாரன்பேட்டை, இடங்கன்னி, பிள்ளைப்பாளையம் ஆகிய கிராமங்களிலும், செந்துறை தாலுகாவில் தா.கூடலூர் கிராமத்திலும் என மொத்தம் 21 கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. எனவே அருகில் உள்ள விவசாய பெருமக்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்களுக்கான சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
2. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? அரியலூர் கலெக்டர் விளக்கம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டில் உள்ளவர்கள் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரியலூர் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
3. அரியலூர் மாவட்டத்தில், 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - கலெக்டர் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் ரத்னா கூறினார்.
4. வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
அரியலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ரத்னா கேட்டுக் கொண்டுள்ளார்.
5. பட்டு விவசாயிகளுக்கு ஊக்கப்பரிசு ; கலெக்டர் வழங்கினார்
பட்டு விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா ஊக்கப்பரிசு வழங்கினார்.