மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி அருகே விபத்துகளை தடுக்க வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும் + "||" + The white school should be painted on the speed bar to prevent accidents near the state school

அரசு பள்ளி அருகே விபத்துகளை தடுக்க வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும்

அரசு பள்ளி அருகே விபத்துகளை தடுக்க வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும்
அரசு பள்ளி அருகே விபத்துகளை தடுக்க வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை நகர பகுதிக்குட்பட்ட எம்.பி.எஸ். அக்ரஹாரம் மற்றும் டவுன்ஹால் தெரு ஆகிய பகுதிகளில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த தெரு பகுதியில் பள்ளி தொடங்கும் காலை மற்றும் பள்ளி விடும் மாலை நேரங்களில் இந்த தெருக்களின் சாலையில் சற்று அதிக்கப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனை கருத்தில்கொண்டு பள்ளியைவிட்டு வெளியே வரும் மாணவ, மாணவிகள் எந்தவகையிலான விபத்துகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும் பொருட்டும், இந்தவழியாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும் எம்.பி.எஸ். அக்ரஹாரம் மற்றும் டவுன்ஹால் தெரு இணையும் இடத்தில் அரசு ஆண்கள் பள்ளி அருகில் வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

மாணவ, மாணவிகள் நலனை கருத்தில்கொண்டு இந்த வேகத்தடை அமைக்கப்பட் டிருந்தாலும், இந்த வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் இதன்மீது வெள்ளை வர்ண பூச்சுகள் அடிக்கப்படவில்லை. இதனால் புதிதாக இச்சாலை வழியாக பயணிப்பவர்கள் மட்டுமல்லாது தினசரி இச்சாலை வழியாகச் செல்பவர் களும் சிறு, சிறு விபத்துகளில் சிக்கிக்கொள்வதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே இதுபோன்ற விபத்துகளை தடுக்க வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசவேண்டும் அதேபோல குளித்தலை நகரப்பகுதிக்குட் பட்ட பல இடங் களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வேகத்தடைகளிலும் வெள்ளை வர்ணம் பூசவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவுவதை தடுக்க பத்திரிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
கொரோனா பரவுவதை தடுக்க பத்திரிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பத்திரிகை அதிபர்களுடன் நடந்த காணொலி கலந்துரையாடலில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
2. ‘வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்’ - பொதுமக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. ‘கொரோனா பரவுவதை தடுக்க கூடுதல் நடவடிக்கை தேவை’ - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள்
கொரோனா பரவுவதை தடுக்க கூடுதல் நடவடிக்கை தேவை என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. கும்பல் கொலையை தடுக்க சட்ட திருத்தம் - அமித்ஷா தகவல்
கும்பல் கொலையை தடுக்க இந்திய தண்டனை சட்டத்தில் தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா கூறினார்.