மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் பயிற்சி வகுப்புக்கு சென்ற கல்லூரி மாணவி கடத்தல்? + "||" + College student abduction?

பாளையங்கோட்டையில் பயிற்சி வகுப்புக்கு சென்ற கல்லூரி மாணவி கடத்தல்?

பாளையங்கோட்டையில் பயிற்சி வகுப்புக்கு சென்ற கல்லூரி மாணவி கடத்தல்?
பாளையங்கோட்டை பெருமாள்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்தனகுமாரி. இவருடைய மகள் ரேவதி (வயது 17).
நெல்லை, 

பாளையங்கோட்டை பெருமாள்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்தனகுமாரி. இவருடைய மகள் ரேவதி (வயது 17). இவர் ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புக்கும் சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி காலை ரேவதி பயிற்சி வகுப்புக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

இதுகுறித்து சந்தனகுமாரி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ரேவதி தங்களது சொந்த ஊரில் உள்ள உறவினர் ஒருவருடன் பேசி பழகி வந்ததாகவும், அவர்தான் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து ரேவதியை தேடி வருகிறார்.