மாவட்ட செய்திகள்

அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது + "||" + The Amma Project Special Camp is going on today

அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது

அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
குமரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களிலும் அம்மா திட்டத்தின் 5–ம் கட்ட சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
நாகர்கோவில், 

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தென்தாமரைகுளம் வருவாய் கிராமத்துக்கு, அங்குள்ள எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும், தோவாளை தாலுகாவில் தோவாளை வருவாய் கிராமத்துக்கு, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கல்குளம் தாலுகாவில் குருந்தன்கோடு ‘ஆ‘ வருவாய் கிராமத்துக்கு கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது.

இதே போல் திருவட்டார் தாலுகாவில் தும்பக்கோடு ‘ஆ‘ வருவாய் கிராமத்துக்கு திருநந்திக்கரை அரசு தொடக்கப்பள்ளியிலும், விளவங்கோடு தாலுகாவில் வெள்ளாங்கோடு வருவாய் கிராமத்துக்கு அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கிள்ளியூர் தாலுகாவில் ஏழுதேசம், ‘சி‘ வருவாய் கிராமத்துக்கு கலிங்கராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. இந்த முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல் போன்ற பொதுவான மனுக்களை பொது மக்கள் அளித்து தீர்வு காணலாம்.

மேற்கண்ட தகவல் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. முக கவசங்களை கண்ட இடங்களில் வீசினால் நோய் தொற்று பரவும் - கலெக்டர் எச்சரிக்கை
முக கவசங்களை கண்ட இடங்களில் வீசினால் நோய் தொற்று பரவும் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2. கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேட்டி
குமரி மாவட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
3. மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
4. முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.
5. இரட்டை ரெயில் பாதை பணி: ஆரல்வாய்மொழி – குமாரபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–