மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க கூட்டம் + "||" + Co-operative Bank Employees Union Meeting

கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க கூட்டம்

கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க கூட்டம்
தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க சிறப்பு செயற்குழு கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது.
கன்னியாகுமரி, 

கூட்டுத்திற்கு மாவட்ட தலைவர் அருமை தங்கம் தலைமை தாங்கினார். பொது செயலாளர் ஸ்ரீமுருகன், மாநில பொது செயலாளர் அர்ச்சுனன், ஜோசப், முத்துராஜ், மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்திலும் கணினி மயமாக்கல் பணியை விரைவில் முடிக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கருணை ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், ரே‌ஷன் கடைகளில் விற்பனை ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும், கிராம கடை விற்பனையாளர்களுக்கு எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், பணிவரை முறை சம்மந்தமாக ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...