மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Muslims protest against Citizenship Amendment Act in Sathyamangalam

சத்தியமங்கலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம், 

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய முஸ்லிம்கள் மீது நடத்திய தடியடியை கண்டித்தும், அந்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் சத்தியமங்கலத்தில் நேற்று மாலை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் பவானி முகமது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. தலைமை கழக பேச்சாளர் பாரூக், பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அஸ்கர் அலி, சத்தி நகர தி.மு.க. பொறுப்பாளர் ஜானகி ராமசாமி, காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் தினேஷ், ஈரோடு வடக்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின் சிவக்குமார், 

பவானிசாகர் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் பொன் தம்பிராஜ், த.மு.மு.க. நகர தலைவர் தாஜ், தமிழ் புலிகள் கட்சி மண்டல செயலாளர் அப்துல்லா உள்பட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவில் மதில் சுவர் கட்ட ரூ.1½ கோடி ஒதுக்கீடு எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தகவல்
சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவிலில் மதில் சுவர் கட்ட ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
2. சத்தியமங்கலம் பகுதியில் ஊரடங்கால் கைத்தறி நெசவு தொழில் பாதிப்பு; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேலைகள் தேக்கம்
ஊரடங்கு காரணமாக சத்தியமங்கலம் பகுதியில் கைத்தறி நெசவு தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் விற்க முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன.
3. சத்தியமங்கலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு வேலா மரப்பட்டைகள் உரிப்பு
சத்தியமங்கலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வேலாமரத்தின் பட்டைகள் உரிக்கப்பட்டு உள்ளன. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
4. சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5. சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.