மாவட்ட செய்திகள்

இன்று புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டம் வழங்குகிறார் + "||" + Today, the Vidyalaya University Graduation Ceremony Vice President Venkayya Naidu confers the degree

இன்று புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டம் வழங்குகிறார்

இன்று புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டம் வழங்குகிறார்
புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடக் கிறது. மாணவ, மாணவிகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டங்களை வழங்குகிறார்.
புதுச்சேரி,

புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இதற்காக விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சென்னையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணியளவில் புதுவை விமான நிலையத்துக்கு வருகிறார். அவரை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

தொடர்ந்து அவருக்கு போலீஸ் மரியாதை வழங்கப்படுகிறது. அதன்பின் கார் மூலம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுவை பல்கலைக்கழகத்தை வந்தடைகிறார். காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை பட்ட மளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். மாணவ, மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி உரையாற்றுகிறார்.

வரவேற்பு ஏற்பாடுகள்

விழா முடிந்ததும் மீண்டும் கார் மூலம் புதுவை விமான நிலையம் திரும்புகிறார். பகல் 11.45 மணி அளவில் ஹெலிகாப்டரில் சென்னை செல்கிறார்.

புதுவைக்கு வரும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை வரவேற்கும் விதமாக அரசு சார்பில் அவர் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஆங்காங்கே வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வழியெங்கும் தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவர் வந்து செல்லும்போது போக்குவரத்தை மாற்றியமைக்கவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி பல்கலைக் கழக வளாகத்தில் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘நான் நலமுடன் இருக்கிறேன்’ வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - வெங்கையா நாயுடு டுவிட்டர் பதிவு
நான் நலமுடன் இருக்கிறேன் நான் குணமடைய வேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
2. மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் ஒருவாரம் சஸ்பெண்ட்
மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
3. கொரோனா பரிசோதனை செய்துகொண்ட வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கய்ய நாயுடு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு கொரோனா பரிசோதனையை செய்துகொண்டார்.