மாவட்ட செய்திகள்

சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.37 லட்சம் மோசடி வக்கீல் கைது + "||" + Rs. 37 lakh fraudulent lawyer arrested in Chennai

சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.37 லட்சம் மோசடி வக்கீல் கைது

சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.37 லட்சம் மோசடி வக்கீல் கைது
சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த வழக்கில் வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர் கலைசெல்வன். இவரது மனைவி கனிமொழி (வயது43). இவர் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் தங்களது மகன் அடல்பிஹாரி அலெக்சாண்டருக்கு வேலை தேடி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சதீ‌‌ஷ்குமார் (35) என்பவரிடம் வேலை கேட்டு அணுகி உள்ளனர். இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். எனவே சென்னை ஐகோர்ட்டில் கிளார்க் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.4½ லட்சம் செலவாகும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதை உண்மை என நம்பி கனிமொழி, வக்கீல் சதீ‌‌ஷ்குமாரின் வங்கி கணக்கில் ரூ.3½ லட்சம் மற்றும் ரொக்கமாக ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.4½ லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் சதீ‌‌ஷ்குமார் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.

ரூ.37 லட்சம் மோசடி

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் கனிமொழி புகார் செய்தார். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா‌‌ஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், வக்கீல் சதீ‌‌ஷ்குமார், சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சத்து 8 ஆயிரம் வாங்கி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சதீ‌‌ஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி வழக்கில் வக்கீல் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் நாமக்கல்லில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பண்ருட்டி அருகே பயங்கரம்: தந்தை அடித்துக் கொலை; கல்லூரி மாணவர் கைது
பண்ருட்டி அருகே தந்தையை அடித்துக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. மணல் கடத்திய 3 பேர் கைது
மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சாங்கியம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
3. சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி அடித்துக்கொலை
சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த தாய், மகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
4. நாமக்கல் அருகே நிலத்தரகர் கொலையில் 5 பேர் கைது
நாமக்கல் அருகே நிலத் தரகர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. வீட்டில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 4 பேர் கைது
பண்ருட்டியில் வீட்டில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.